உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த மினி லாரி மீது கார் மோதி 2 பேர் பலி

Published On 2023-04-01 10:35 IST   |   Update On 2023-04-01 10:35:00 IST
  • விபத்தில் சிக்கிய 2 வாகனங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
  • சாலையோரம் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூரில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரம் மினி லாரி நின்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை இந்த நெடுஞ்சாலையில் வந்த கார் இந்த மினி லாரி மீது மோதியது. இதில் காரில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் ஆபத்தான நிலையில் துடிதுடித்துக் கொண்டிருந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநாவலூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து போனவர்களில் ஒருவர் கார் டிரைவர் என்பதும், மற்றொருவர் கோவையைச் சேர்ந்த விவேகானந்தன் என்பதும் தெரியவந்தது. மேலும், பலத்த காயம் அடைந்தவர்கள் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த சரவணன், மகாலிங்கம் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து திருநாவலூர் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகவும், உயிரிழந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விபத்தில் சிக்கிய 2 வாகனங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். அதிகாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News