திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
- வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருடு போனது.
- போலீசார் மேற்கண்ட இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே உள்ள நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 43). இவர் நேற்று முன்தினம் இரவு தன் மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். மறுநாள் காலையில் பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பல இடங்களில் தேடியும் அது கிடைக்கவில்லை. அதேபோல திருவள்ளூர் அடுத்த மப்பேடு புதிய காலனியை சேர்ந்தவர் ராமு (வயது 31) இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருடு போனது. இது குறித்து பாபு , ராமு இருவரும் மப்பேடு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிள்களை திருடியது ராணிப்பேட்டை மாவட்டம் மேட்டூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் என்கின்ற செல்வகுமார் (வயது 25), திருவள்ளூர் அடுத்த மோசூர் திடீர் நகரை சேர்ந்த சக்திவேல் ( 23) என தெரியவந்தது. இதை தடுத்த போலீசார் மேற்கண்ட இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.