உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே ராட்சத தேனீக்கள் கொட்டியதில் பெண்கள் உள்பட 25 பேர் மயக்கம்
- புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் ராட்சத தேனீக்கள் கூடுகட்டி இருந்தது.
- தேனீக்கள் அவ்வழியே சென்றவர்களை விரட்டி,விரட்டி கொட்டியது.
திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் ராட்சத தேனீக்கள் கூடுகட்டி இருந்தது. இதனை கண்ட சிறுவர்கள் தேன்கூடு மீது கற்களை வீசினர். இதில் கலைந்த தேனீக்கள் அவ்வழியே சென்றவர்களை விரட்டி,விரட்டி கொட்டியது.
இதில் அப்பகுதிைய சேர்ந்த வாசுதேவன்(46) ராதா(65), தேவகுமார்(65), சூர்யா(40) அன்னை மரியா(57) உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோரை ராட்சத தேனீக்கள் கொட்டின. இதில் அவர்கள் மயக்கம்அடையும் நிலை ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.