உள்ளூர் செய்திகள்
திருவள்ளூரில் லாரி மோதி மின் ஊழியர் பலி
- விபத்தில் பலத்த காயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த ஓதிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது53). சென்னை மாங்காட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று மாலை பணி முடித்து வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
திருவள்ளூர் வந்த அவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு ஓதிக்காடு நோக்கி சென்று கொண்டு இருந்தார். திருவள்ளூரில் உள்ள தேவாலயம் அருகே சென்றபோது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். திருவள்ளூர் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.