திருவள்ளூரில் பஸ்சில் இருக்கைக்கு இடம்பிடிக்க வைத்த பையில் நகை திருட்டு
- பெரியபாளையம் அடுத்த ஆரணி பகுதியை சேர்ந்தவர் லதா.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி மூலம் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்:
பெரியபாளையம் அடுத்த ஆரணி பகுதியை சேர்ந்தவர் லதா. இவர் மகள் நிர்மலாவுடன் திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் இரவு 7 மணி அளவில் மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து பொன்னேரி செல்லும் அரசு பஸ்சில் ஜன்னல் வழியாக இருக்கையில் அமர்வதற்கு நகை இருந்த பையை வைத்தார். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் இடம் பிடிக்க லதா வைத்த கை பையில் இருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் 2 செல்போன்களை திருடி தப்பிச்சென்று விட்டனர்.
இருக்கை கிடைத்த மகிழ்ச்சியில் லதா பையை திறந்து பார்த்தார். நகை செல்போன் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி மூலம் தேடி வருகின்றனர்.