உள்ளூர் செய்திகள்
திருத்தணியில் 103.5 டிகிரி வெயில் சுட்டெரித்தது
- திருத்தணியில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது.
- திருத்தணியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
திருத்தணி:
திருத்தணியில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. திருத்தணி நகரைச் சுற்றியும் மலைகள் சூழ்ந்து உள்ளதால் வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகளவில் இருக்கும்.
திருத்தணியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மதிய நேரத்தில் சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடியது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பழச்சாறு, ஐஸ்கிரீம் மற்றும் பழக்கடைகளில் குவிந்தனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்றவர்கள் குடைபிடித்தபடியும், தலையை துணியால் மூடியபடியும் பயணித்தனர். நேற்றைய நிலவரப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 103.5 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது.