உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே மது போதையில் அரசு பேருந்தை வழி மறித்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு

Published On 2023-07-16 05:19 GMT   |   Update On 2023-07-16 05:19 GMT
  • பொறுமை இழந்த சில பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி ரகளை ஈடுபட்ட வாலிபரை கண்டித்தனர்.
  • பேருந்தை முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வாலிபர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பேருந்து பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரம் கல்லாத்தூர் இடையே சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் அந்த பேருந்தை வழி மறித்தார். தனது மோட்டார் சைக்கிளை அந்த பஸ்ஸின் முன்பு குறுக்கே நிறுத்தி அவர் டிரைவரை தகாத வார்த்தைகள் திட்டி ரகளையில் ஈடுபட்டார்.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் செய்வதறியாமல் தவித்தனர். பின்னர் பொறுமை இழந்த சில பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி ரகளை ஈடுபட்ட வாலிபரை கண்டித்தனர். இதனால் அடி விழக்கூடும் எனக் கருதிய அந்த வாலிபர் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வாலிபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றார். இந்த சம்பவத்தால் அந்த அந்த பேருந்து சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

பேருந்தை முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வாலிபர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பேருந்து பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News