உள்ளூர் செய்திகள்
படப்பை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை
- படப்பை அடுத்த மாடம்பாக்கம், கார்த்திக் நகர், பட்டினத்தார் தெருவை சேர்ந்தவர் சிவா.
- சிவாவின் வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
படப்பை அடுத்த மாடம்பாக்கம், கார்த்திக் நகர், பட்டினத்தார் தெருவை சேர்ந்தவர் சிவா. இவர் கடந்த 7-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்காக திருநெல்வேலிக்கு சென்றார்.
இந்த நிலையில் இன்று காலை சிவாவின் வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசுக்கும், சிவாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து விசாரித்த போது பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.8ஆயிரம் ரொக்கம் ஆகிய வற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.