உள்ளூர் செய்திகள்
மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்
- மீஞ்சூர் அருகே உள்ள சோம்பட்டு பகுதிைய சேர்ந்தவர் சுகுணா.
- தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரை சந்திர சேகர் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.
பொன்னேரி:
மீஞ்சூர் அருகே உள்ள சோம்பட்டு பகுதிைய சேர்ந்தவர் சுகுணா. மின்கசிவு காரணமான இவரது குடிசை வீடு திடீரென தீப்பற்றியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். சிறிது நேரத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் தங்க நகை நாசமானது.
தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரை சந்திர சேகர் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். அப்போது சோம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம், வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபா, கிராம நிர்வாக அலுவலர் உஷா ஆகியோர் உடன் இருந்தனர்.