உள்ளூர் செய்திகள்

போலீஸ் மானிய கோரிக்கையை விமர்சித்து கருத்து: தேனாம்பேட்டை-போரூர் போலீஸ் ஏட்டுகள் 2 பேர் சஸ்பெண்டு

Published On 2023-04-22 10:05 GMT   |   Update On 2023-04-22 10:05 GMT
  • 2 ஏட்டுகள் ஒரே நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஏட்டு பால முருகனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

சென்னை:

தமிழக சட்டசபையில் போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பதில் அளித்து பேசினார்.

இந்த போலீஸ் மானிய கோரிக்கையை விமர்சித்து தேனாம்பேட்டை ஏட்டு பாலமுருகன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஏட்டு பால முருகனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

இதேபோன்று ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட போரூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்த கோபி கண்ணன் என்பவரும் காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அவரை ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

2 ஏட்டுகள் ஒரே நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News