நத்தம் அருகே தோட்டத்து வீட்டில் வாலிபர் வெட்டிக்கொலை
- நத்தம் சுற்று வட்டார பகுதியில் அடிக்கடி நடந்து வரும் கொலை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள காசம்பட்டியைச் சேர்ந்த கணேசன் மகன் ஜோதி (வயது 27). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்து வீடு அதே பகுதியில் உள்ளது.
இரவு நேரங்களில் இந்த வீட்டில் ஜோதி தங்கி இருப்பது வழக்கம். அதன்படி நேற்று இரவு தோட்டத்து வீட்டுக்கு சென்றவர் இன்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது ஜோதியின் கழுத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்து இறந்து கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், ஏ.எஸ்.பி. அருண் கபிலன் ஆகியோரும் பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
பெண் பிரச்சினையில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஜோதியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நத்தம் சுற்று வட்டார பகுதியில் அடிக்கடி நடந்து வரும் கொலை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.