உள்ளூர் செய்திகள்

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இன்று மொட்டையடித்து போராட்டம்

Published On 2022-06-30 10:37 GMT   |   Update On 2022-06-30 10:38 GMT
  • ஆசிரியர் பணி நியமனம் செய்வதில் பழையபடி வயது வரம்பை தளர்த்தி பணி நியமனம் செய்யவும் கோரிக்கை வைத்தனர்.
  • போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இன்று மொட்டையடித்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

சென்னை:

'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 3-வது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்தது.

தற்காலிக ஆசிரியர் நியமனத்தை நிறுத்தி அந்த பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை உடனடியாக நியமனம் செய்யக்கோரி இந்த போராட்டம் நடந்தது.

ஆசிரியர் பணி நியமனம் செய்வதில் பழையபடி வயது வரம்பை தளர்த்தி பணி நியமனம் செய்யவும் கோரிக்கை வைத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இன்று மொட்டையடித்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் தங்களை பணியில் அமர்த்த கோரி பிச்சை எடுத்தும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் 'பாடை' போல் படுத்த படியும் ஆசிரியர்கள் இன்று போராட்டம் நடத்தினார்கள்.

ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News