திருவள்ளூரில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குபோட்டு தற்கொலை
- சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்த சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த காக்களூர் பை பாஸ் சாலையில் வசித்து வந்தவர் தணிகை வேல்(வயது49). இவர் திருவள்ளூர் உட்கோட்ட நெடுஞ்சாலை ரோந்துபணியில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் பணி முடிந்து தணிகைவேல் வீட்டுக்கு வந்தார். அவர் வீட்டில் உள்ள தனி அறையில் ஓய்வு எடுப்பதாக கூறி சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் சென்று பார்த்த போது அறையில் உள்ள மின் விசிறியில் தணிகைவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் தணிகைவேலின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் தணிகைவேல் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. குடும்ப தகராறில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்த சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.