உள்ளூர் செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
- காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லாரை பகுதியை சேர்ந்தவர் சரண்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லாரை பகுதியை சேர்ந்தவர் சரண் (வயது 22). வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சரணை மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்து சரண் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி விசாரித்ததில் ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு கீழாண்டை தெருவை சேர்ந்த 18 வயது சிறுவன் மற்றும் காஞ்சிபுரம் புதிய ரெயில்வே ரோடு பகுதியை சேர்ந்த ஜீவா (20) என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.