உள்ளூர் செய்திகள்

மர்மாக இறந்த கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு விசாரணை ஆகஸ்டு 22-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2023-07-19 09:00 GMT   |   Update On 2023-07-19 09:00 GMT
  • கடந்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி பள்ளி வளாகத்தில் கலவரம் வெடித்தது.
  • கலவரத்தை தொடர்ந்து சுமார் 600 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவி ஸ்ரீமதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அவரது தாய் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி பள்ளி வளாகத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை தொடர்ந்து சுமார் 600 பேர் வரை கைது செய்யப்பட்டனர். மாணவி உயிரிழந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கினை ஆகஸ்ட் 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News