உள்ளூர் செய்திகள்

விருகம்பாக்கத்தில் ரூ.5 ஆயிரம் தகராறில் சித்த வைத்தியர் அடித்துக்கொலை

Published On 2022-12-13 12:14 IST   |   Update On 2022-12-13 12:14:00 IST
  • உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கார்த்திகேயனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
  • கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

போரூர்:

விருகம்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 50) சித்த வைத்தியர் இவரது நண்பர் கலியமூர்த்தி வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

கலியமூர்த்தி தான் சம்பளம் வாங்கி சேமித்து வைத்திருந்த ரூ.50ஆயிரம் பணத்தை நண்பர் கார்த்திகேயனிடம் கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கலியமூர்த்தி தனது அவசர தேவைக்காக கார்த்திகேயனிடம் ரூ.5 ஆயிரம் பணம் கேட்டார்.

ஆனால் பணம் தர மறுத்த கார்த்திகேயன் கலியமூர்த்தியை தகாதவார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கலியமூர்த்தி கீழே கிடந்த உருட்டுக் கட்டையால் சித்த வைத்தியர் கார்த்திகேயனை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த கார்த்திகேயன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் மற்றும் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து காவலாளி கலியமூர்த்தியை கைது செய்தனர்.

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கார்த்திகேயனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

Similar News