உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது
- சங்கராபுரம் அருகே 50 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
- சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், இளங்கோ தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கொசப்பாடி கிராமத்தை சேர்ந்த இளகாந்தம் (வயது 57) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசாா், அவரை கைது செய்து, அவரிடமிருந்து 50 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (40) என்பவர் கொசப்பாடி ஏரிகோடி பாலம் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரையும் போலீசார் கைது செய்து, 55 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் பாவளம் கிராமத்தில் சாராயம் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ஆராயி (55) என்பவரையும் போலீசாா் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.