உள்ளூர் செய்திகள்
நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி வாகனத்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
- சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது.
- மழை நீர் வடிகால்வாய் அமைக்காவிட்டால் தங்களது குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுத்தும் என்று குற்றம் சாட்டி உள்ளனர்.
பூந்தமல்லி:
செம்பரம்பாக்கம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. இதில் மழை நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழஞ்சூர், பாப்பன்சத்திரம் பகுதி மக்கள் சாலை அமைக்க வந்த வாகனத்தை சிறை பிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மழை நீர் வடிகால்வாய் அமைக்காவிட்டால் தங்களது குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுத்தும் என்று குற்றம் சாட்டி உள்ளனர்.