உள்ளூர் செய்திகள்

டைரக்டர் பா.ரஞ்சித் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்- பாரத் இந்து முன்னணி அறிவிப்பு

Published On 2023-05-14 16:18 IST   |   Update On 2023-05-14 16:18:00 IST
  • விடுதலை சிகப்பிக்கு தண்டனை வாங்கி தர உயர்நீதிமன்றத்துக்கு பாரத் இந்து முன்னணி சென்று போராடும்.
  • டைரக்டர் ரஞ்சித் உதவியாளர் செய்த தவறை திசை திருப்பும் முயற்சியை உடனே நிறுத்த வேண்டும்.

சென்னை:

பாரத் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் ஆர்.டி.பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

டைரக்டர் பா.ரஞ்சித்தின் உதவியாளர் விடுதலை சிகப்பி என்பவர் ராமர் சீதா தேவி, லட்சுமணன், அனுமன் ஆகியோர் பற்றி அவதூறாக கவிதை படித்தது தொடர்பாக பாரத் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து கடவுள்களை அவமானப்படுத்தி, கேவலப்படுத்தி பேசியதற்காக மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும் அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று மீண்டும், மீண்டும் அவர்கள் பேசுவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

விடுதலை சிகப்பிக்கு தண்டனை வாங்கி தர உயர்நீதிமன்றத்துக்கு பாரத் இந்து முன்னணி சென்று போராடும்.

டைரக்டர் ரஞ்சித் உதவியாளர் செய்த தவறை திசை திருப்பும் முயற்சியை உடனே நிறுத்த வேண்டும். இல்லையென்றால் டைரக்டர் ரஞ்சித் அலுவலகம் முன்பு பாரத் இந்து முன்னணி சார்பில் ஸ்ரீராம நாம பஜனைகளுடன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News