உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள்

Published On 2023-05-05 14:33 IST   |   Update On 2023-05-05 14:33:00 IST
  • தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
  • திரைப்படத்தை தடை செய்யாவிட்டால் ஜனநாயக வழியில் போராட்டங்கள் வெடிக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கடையநல்லூர்:

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தடை செய்ய வேண்டும், திரையிடக்கூடாது என்று கூறி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் அச்சடிக்கப்பட்டுள்ள அந்த போஸ்டர்கள் கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை புளியங்குடி, சங்கரன்கோவில், பொட்டல்புதூர் ஆகிய பகுதிகளில் அதிகமாக ஒட்டப்பட்டுள்ளது.

கேரளாவில் இந்த படத்தை திரையிட கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், அமைதி பூங்காவான தமிழகத்தின் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் இந்த திரைப்படத்தை தடை செய்யாவிட்டால் ஜனநாயக வழியில் போராட்டங்கள் வெடிக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News