உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லி அருகே தொழிற்சாலையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள டயர்கள் திருட்டு

Published On 2022-11-29 13:46 IST   |   Update On 2022-11-29 13:46:00 IST
  • பூந்தமல்லி அருகே உள்ள சொக்கநல்லூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது.
  • குறித்து தனியார் தொழிற்சாலையின் மேலாளர் முருகன் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார்

பூந்தமல்லி அருகே உள்ள சொக்கநல்லூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 2 லாரிகளில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான 12 புதிய வாகன டயர்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.

இது குறித்து தனியார் தொழிற்சாலையின் மேலாளர் முருகன் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இளையராஜா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Similar News