உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே நாட்டு வெடியை கடித்ததில் வாய் கிழிந்து நாய் பலி

Published On 2023-04-05 14:16 IST   |   Update On 2023-04-05 14:16:00 IST
  • காட்டுப்பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்ட நாட்டுவெடியை நாய் கடித்து இருக்கலாம் என்று தெரிகிறது.
  • மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பொன்னேரி:

பொன்னேரி அருகே உள்ளது வன்னிப்பாக்கம் கிராமம். இங்குள்ள தெரு நாய் ஒன்று அங்கு கிடந்த நாட்டு வெடியை கடித்தது. இதில் அந்த வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதில் அந்த நாயின் வாய் கிழிந்து உயிருக்கு போராடிய படி கிடந்தது. இந்த நிலையில் அந்த நாய் பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

காட்டுப்பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்ட நாட்டுவெடியை நாய் கடித்து இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த நாட்டு வெடியை வைத்தவர்கள் யார்? என்பது குறித்த தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News