உள்ளூர் செய்திகள்
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலை
- மன உளைச்சலில் இருந்த முருகன் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சேடன்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 58) . இவர் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.இதனை அடுத்து முருகன் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார்.
பின்னர் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முருகன் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.