உள்ளூர் செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
கொடைக்கானலில் டாஸ்மாக் கடை அமைக்கக் கோரி சாலை மறியல்
- பெருமாள் மலை பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியதால் அகற்றப்பட்டது.
- தனியார் மதுபான விடுதி உள்ள நிலையில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் எனக்கோரி திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகர் மற்றும் மேல்மலை, கீழ்மலை கிராம பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. பெருமாள் மலை பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியதால் அகற்றப்பட்டது.
ஆனால் தற்போது அதே பகுதியில் தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடையைவிட இங்கு மதுபானங்கள் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் கூலித்தொழிலாளர்கள் அதிக விலை கொடுத்து மதுவாங்க சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பெருமாள்மலை பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தனியார் மதுபான விடுதி உள்ள நிலையில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் எனக்கோரி திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.