உள்ளூர் செய்திகள்
பள்ளிக்கரணை அருகே ஓட்டலில் வாலிபர்கள் மீது தாக்குதல்
- அஸ்தினாபுரம், நேதாஜி தெருவை சேர்ந்தவர்கள் பாலாஜி,லோகேஷ், விக்டர்.
- பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அஸ்தினாபுரம், நேதாஜி தெருவை சேர்ந்தவர்கள் பாலாஜி,லோகேஷ், விக்டர். இவர்கள் 3 பேரும் பள்ளிக்கரணை அடுத்த நன்மங்கலம் பகுதியில் உள்ள பிரியாணி ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது அங்கு மதுபோதையில் வந்த 10 பேர் கும்பல் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கி தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பாலாஜி உள்பட 3 பேருக்கும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.