உள்ளூர் செய்திகள்
பல்லாவரம் அருகே கல்குவாரி தண்ணீரில் முழ்கி முதியவர் பலி
- பல்லாவரம் அடுத்த திரிசூலம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி.
- ஆழமான பகுதிக்கு சென்ற பழனிசாமி தண்ணீரில் மூழ்கி பலியானார்.
தாம்பரம்:
பல்லாவரம் அடுத்த திரிசூலம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது68).
இன்று காலை அவர், அதே பகுதி கண்ணபிரான் கோவில் தெருவில் உள்ள கல்குவாரி தண்ணீரில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற பழனிசாமி தண்ணீரில் மூழ்கி பலியானார்.