உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மனைப்பிரிவு கட்டிடத்துக்கு அனுமதி பெற இணையதள முறை
- நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் மனைப்பிரிவு, கட்டிடம் மற்றும் நில உபயோக மாற்றம் குறித்த அனுமதி.
- நிலப்பயன் மாற்றம் மற்றும் திட்ட அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்:
நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லை வரம்பிற்குள் அமையும் காஞ்சிபுரம் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் மனைப்பிரிவு, கட்டிடம் மற்றும் நில உபயோக மாற்றம் குறித்த அனுமதி பெறும் வகையில் இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றது. எனவே, இத்திட்டத்தின் கீழ் மனைப்பிரிவு கட்டிடம் மற்றும் நிலப்பயன் மாற்றம் அனுமதி பெறுபவர்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பம் பதிவு செய்து கட்டிட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி மற்றும் நிலப்பயன் மாற்றம் மற்றும் திட்ட அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.