ஆவடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் 8-வது மாடியில் இருந்து விழுந்து வடமாநில சிறுவன் பலி
- 8-வது மாடியில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ராகுல் (வயது15). பணியில் ஈடுபட்டார். திடீரென அவர் தவறி கீழே விழுந்தார்.
- ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநின்றவூர்:
ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு 3-வது கட்டமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். நேற்று ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் இருந்தனர்.
அப்போது 8-வது மாடியில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ராகுல் (வயது15). பணியில் ஈடுபட்டார். திடீரென அவர் தவறி கீழே விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக சிறுவன் ராகுலை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் போகும் வழியிலேயே ராகுல் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஆவடி போலீசார் விரைந்து வந்து சிறுவன் உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.