உள்ளூர் செய்திகள்

மும்பையில் பணமோசடி வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது

Published On 2022-09-23 14:15 IST   |   Update On 2022-09-23 14:15:00 IST
பணமோசடி வழக்கில் தேடப்பட்ட நிக்மத் அலி வந்திருப்பது தெரிந்தது. அவரை கைது செய்து மும்பை போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

ஆலந்தூர்:

மும்பையை சோ்ந்தவர் நிக்மத் அலி.தொழில் அதிபர். இவா் மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை போலீசார தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று காலை சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளுடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பணமோசடி வழக்கில் தேடப்பட்ட நிக்மத் அலி வந்திருப்பது தெரிந்தது. அவரை கைது செய்து மும்பை போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

Similar News