உள்ளூர் செய்திகள்
மீஞ்சூர் அருகே ஊராட்சி துணைத்தலைவர் மீது தாக்குதல்- 7 பேர் கைது
- மர்ம கும்பல் ஹரிகிருஷ்ணனை சரமாரியாக தாக்கி தப்பி சென்று விட்டனர்.
- மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை ஊராட்சியில் துணைத்தலைவராக உள்ளவர் ஹரிகிருஷ்ணன். ஏற்கனவே இந்த ஊராட்சியில் தலைவராக இருந்த மனோகரன் என்பவர் கடந்த ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தற்போது ஹரிகிருஷ்ணன் ஊராட்சி தலைவர் பொறுப்பை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு அவர் அதேபகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காண்டிராக்ட் எடுத்து செய்து வரும் பணியை பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஹரிகிருஷ்ணனை சரமாரியாக தாக்கி தப்பி சென்று விட்டனர்.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.