உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,723 கனஅடியாக சரிவு
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
- நேற்று 102.71 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி 102.70 அடியாக சரிந்தது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததுள்ளது.
நேற்று விநாடிக்கு 1,873 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,723 கனஅடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று 102.71 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி 102.70 அடியாக சரிந்தது.