உள்ளூர் செய்திகள்
செங்கம் அருகே விவசாயி குடும்பத்தினரை கட்டிப்போட்டு நகை கொள்ளை
- ராஜவேலு மற்றும் அவருடைய மனைவி தேன்மொழியை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 5 பவுன் நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
- அக்கம பக்கத்தில் இருந்தவர்கள் செங்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அடுத்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ராஜவேலு (65) விவசாயி.
இவரது மனைவி தேன்மொழி (50), தாயார் கண்ணம்மா (90) உள்ளிட்டோருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் மர்ம நபர்கள் முகமூடி அணிந்து வீட்டிற்குள் புகுந்தனர்.சத்தம் கேட்டு கண்விழித்த ராஜவேலு மற்றும் அவருடைய மனைவி தேன்மொழியை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 5 பவுன் நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அக்கம பக்கத்தில் இருந்தவர்கள் செங்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர். மேலும் வழக்கு வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.