உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் நூதனமாக ரூ.2 லட்சம் கொள்ளை

Published On 2022-10-08 12:43 IST   |   Update On 2022-10-08 12:43:00 IST
  • முருகேசன் வங்கியில இருந்து எடுத்து வந்த ரூ.2 லட்சம் பணத்தை பையுடன் எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
  • முருகேசன் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த புதுச்சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (56). இவர் சொந்தமாக லாரி வைத்து தானே ஓட்டி வருகிறார்.

இவர் நேற்று திருமழிசையில் உள்ள தனியார் வங்கியிலிருந்து ரூ.2 லட்சத்தை எடுத்துக் கொண்டு அதை தனது பையில் வைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டார்.

வங்கியில் இருந்து சிறிது தூரத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள், முருகேசனிடம் பணம் கீழே விழுந்ததாக கூறியுள்ளனர்.

இதனால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பின்னால் திரும்பி பார்த்த போது முருகேசன் வங்கியில இருந்து எடுத்து வந்த ரூ.2 லட்சம் பணத்தை பையுடன் எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News