உள்ளூர் செய்திகள்

மதுரவாயலில் கழுத்தை இறுக்கி முதியவர் கொலை?

Published On 2022-09-05 17:10 IST   |   Update On 2022-09-05 17:10:00 IST
  • மதுரவாயலில் இன்று காலை முதியவர் ஒருவர் மர்மமாக இறந்து கிடந்தார்.
  • போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போரூர்:

மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகில் மின்விளக்கு கம்பம் உள்ளது. இதில் இன்று காலை முதியவர் ஒருவர் மர்மமாக இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் வயரால் இறுக்கப்பட்டு இருந்தது. அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News