உள்ளூர் செய்திகள்

பொன்னேரி-மீஞ்சூர் பகுதியில் 'மெட்ராஸ் ஐ' பரவுகிறது

Published On 2023-09-08 06:18 GMT   |   Update On 2023-09-08 06:18 GMT
  • மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது.
  • நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது.

பொன்னேரி:

பொன்னேரி மற்றும் மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மெட்ராஸ் ஐ கண்நோய்க்கு சிகிச்சை பெற்று செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த கண்நோயாால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் 2 வாரத்துக்கும் மேல் இதனால் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

இதுகுறித்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் அசோகன் கூறியதாவது:-

மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது. இது பருவமழை காலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளில் ஒன்று ஆகும். கண்ணின் விழி வெண்படலத்தில் ஏற்படும் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் இது எளிதில் பரவக்கூடியது. மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் கடைகளில் விற்கப்படும் சொட்டு மருந்து வாங்கி ஊற்ற வேண்டாம்.

மெட்ராஸ் ஐயால் பாதிக்கப்பட்டவர்கள் கண் கூசும் பொருட்களை பார்க்க வேண்டாம். நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது. வெளியில் வெயிலில் அதிகம் செல்ல வேண்டாம். செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும், குளிர்ச்சியான நீர் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். பாதிக்கப்பட்டவர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வெளியில் சென்று வந்தால் கைகளை உடனடியாக கழுவ வேண்டும. இதுபற்றி பயப்படத் தேவையில்லை. இதற்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கூறினார்.

Tags:    

Similar News