உள்ளூர் செய்திகள்

காட்ரம்பாக்கம் ஊராட்சியில் சாலையோரம் குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி

Published On 2023-01-23 16:40 IST   |   Update On 2023-01-23 16:40:00 IST
  • மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடியவர்கள் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
  • சாலையோரம் கொட்டப்பட்ட குப்பபைகளை எரிப்பதால் பொதுமக்களுக்கு தோற்று நோய் ஏற்படும் நிலை உள்ளது.

சோமங்கலம்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் ஊராட்சியில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள முக்கிய

சாலையின் ஓரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அந்த குப்பைகளை அந்த பகுதியிலே எரிப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாலையில் புகைமூட்டம் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடியவர்கள் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

சாலையோரம் கொட்டப்பட்ட குப்பபைகளை எரிப்பதால் பொதுமக்களுக்கு தோற்று நோய் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாலையோரங்களில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருப்பதற்கு போதிய குப்பை தொட்டிகள் அமைத்து குப்பைகளை கொட்டுவதற்கு ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News