உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் ஏ.டி.எம். எந்திரம் தீப்பிடித்து எரிந்தது

Published On 2023-01-27 13:01 IST   |   Update On 2023-01-27 13:01:00 IST
  • மக்கள் காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
  • காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வேதாச்சலம் நகர் பகுதியில் ஏ.டி.எம்.மையம் உள்ளது.

வாடிக்கையாளர் ஒருவர் எந்திரத்தில் பணம் எடுத்துக்கொண்டு இருந்தபோது ஏ.டி.எம்.எந்திரத்தின் பின்பகுதியில் இருந்து கரும்புகை வந்தது.

சிறிது நேரத்தில் தீ மள,மளவென எந்திரம் முழுவதும் பரவி பற்றி எரியத்தொடங்கியது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் அலறியடித்து ஏ.டி.எம். மையத்தில் இருந்து வெளியேவந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீணை அணைத்தனர். ஏ.டி.எம்.மின் பின்புறம் முழுவதும் எரிந்து நாசமானது. மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

இந்த தீவிபத்தில் ஏ.டி.எம். எந்திரத்தின் உள்ளே இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது.

இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News