உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் 389 பயனாளிகளுக்கு ரூ.452 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி- அமைச்சர் வழங்கினார்

Published On 2023-11-08 12:17 IST   |   Update On 2023-11-08 12:17:00 IST
  • பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் கேட்டுக்கொண்டார்.
  • கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர்நித்தியா சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டார்.

பெறப்பட்ட 316 மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடுகாடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதிகம் இருந்தன.

இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் மொத்தம் 389 பயனாளிகளுக்கு ரூ. 452.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்.எல்.ஏ.க்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் தேவேந்திரன்,  ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுத்தலைவர், கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர்நித்தியா சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News