உள்ளூர் செய்திகள்

ஐசரி கணேஷின் தாயார் காலமானார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published On 2022-07-15 15:18 IST   |   Update On 2022-07-15 15:18:00 IST
  • புஷ்பா ஐசரி வேலன் உடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
  • புஷ்பா ஐசரி வேலன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை:

மறைந்த நடிகரும், தமிழக அரசின் முன்னாள் துணை அமைச்சருமான ஐசரி வேலனின் மனைவியும், 'வேல்ஸ்' பல்கலைக்கழக வேந்தரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கே.கணேஷின் தாயாருமான புஷ்பா அம்மையார் வயது முதிர்வு காரணமாக தனது இல்லத்திலேயே ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 75.

புஷ்பா அம்மையாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) அவரது உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, ஈஞ்சம்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

புஷ்பா ஐசரி வேலன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புஷ்பா ஐசரி வேலன் உடலுக்கு புதுச்சேரி முதல்-மந்திரி ரெங்கசாமி, ஜெகத்ரட்சகன் எம்.பி., பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர்கள் பிரபு, எஸ்.வி.சேகர், ஆர்.ஜே.பாலாஜி, உதயா, திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் சைதை துரைசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News