உள்ளூர் செய்திகள்

புகார் வாங்க மறுப்பு- இன்ஸ்பெக்டர் ரூ.3 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

Published On 2022-11-04 10:07 GMT   |   Update On 2022-11-04 10:07 GMT
  • புகாரை வாங்காமல் அலைக்கழித்ததாகவும், புகார் கொடுக்க சென்ற குப்புசாமி மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், மாநில மனித உரிமை அணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
  • மாநில மனித உரிமை ஆணையம் சம்பவம் நடந்தபோது கள்ளிமந்தயம் போலீஸ்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சரவணன் என்பவருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பெருமாள்கோவில் வலசை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி செல்லாத்தாள். மகன் குப்புசாமி. இவர்களிடம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த பைனான்சியர்கள் செல்வன், மணி ஆகியோர் வெற்று பத்திரங்களில் கையெழுத்து பெற்றுள்ளனர். இது குறித்து குப்புசாமி கள்ளிமந்தயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் புகாரை வாங்காமல் அலைக்கழித்ததாகவும், புகார் கொடுக்க சென்ற குப்புசாமி மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், மாநில மனித உரிமை அணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனை விசாரித்த ஆணையம் சம்பவம் நடந்தபோது கள்ளிமந்தயம் போலீஸ்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சரவணன் என்பவருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது. அதனை மனுதாரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News