உள்ளூர் செய்திகள்

புதிய தலைமை செயலகம் திறப்பு விழா- தமிழக முதலமைச்சருக்கு தெலுங்கானா முதல்வர் அழைப்பு

Published On 2023-01-24 08:50 GMT   |   Update On 2023-01-24 08:50 GMT
  • புதிய தலைமை செயலகம் திறப்பு விழா பிப்ரவரி மாதம் 17ம் தேதி தெலுங்கானாவில் நடைபெறுகிறது.
  • பிப்ரவரி மாதம் 17ம் தேதி செகந்திரபாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொள்கிறார்.

தெலுங்கானாவில் புதிதாக மாநில தலைமை செயலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா பிப்ரவரி மாதம் 17ம் தேதி தெலுங்கானாவில் நடைபெறுகிறது.

புதிய தலைமை செயலக திறப்பு விழாவில் கலந்துக் கொள்ளுமாறு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

இதைதொடர்ந்து, பிப்ரவரி மாதம் 17ம் தேதி செகந்திரபாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News