உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே அரசு பஸ்சில் திடீரென்று புகை வந்ததால் பரபரப்பு
- பஸ்சின் உள்ளே பின் புறம் புகை வந்த டியூப் லைட் ஒயர் இருந்த பகுதியை ஆய்வு செய்தனர்.
- பஸ்சை இயக்கிய போது புகை வரவில்லை. இதனையடுத்து அரை மணி நேர தாமதத்திற்குப் பிறகு பஸ் அரக்கோணம் நோக்கி புறப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து அரக்கோணத்திற்கு புறப்பட்ட ஒரு அரசு பஸ்சில் பள்ளி மாணவ, மாணவிகள், உள்பட ஏராளமானோர் பயணித்தனர். பஸ் திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையம் அருகே செல்லும் போது பஸ்சில் இருந்த டியூப் லைட் ஒயரில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் மற்றும் மாணவர்கள் அச்சமடைந்து பஸ்சை நிறுத்தினர். இதனையடுத்து தாலுகா போலீசில் கொடுத்த தகவலின் பேரில் பஸ்சின் உள்ளே பின் புறம் புகை வந்த டியூப் லைட் ஒயர் இருந்த பகுதியை ஆய்வு செய்தனர்.
அதன் பிறகு பஸ்சை இயக்கிய போது புகை வரவில்லை. இதனையடுத்து அரை மணி நேர தாமதத்திற்குப் பிறகு பஸ் அரக்கோணம் நோக்கி புறப்பட்டது.