உள்ளூர் செய்திகள்
தாம்பரம் அருகே அரசு விரைவு பஸ்சின் கண்ணாடி கல்வீசி உடைப்பு
- பஸ் கிழக்கு தாம்பரம், மகாலட்சுமி நகர் அருகே பயணி ஒருவரை ஏற்றுவதற்காக நின்றது.
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார்.
தாம்பரம்:
சென்னை அடையாறில் இருந்து திருவண்ணாமலைக்கு (எண் 122) குளிர் சாதன அரசு விரைவு பஸ் சென்றது. சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் கிழக்கு தாம்பரம், மகாலட்சுமி நகர் அருகே பயணி ஒருவரை ஏற்றுவதற்காக நின்றது. அப்பேது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார்.
இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பெண்பயணி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சேலையூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக பஸ் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.