உள்ளூர் செய்திகள்

சென்னையில் போலி இன்சூரன்ஸ் பாலிசி தயாரித்தவர்கள் மீது வழக்கு- பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுரை

Published On 2022-10-14 15:20 IST   |   Update On 2022-10-14 15:20:00 IST
  • ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் நரசத்பேட்டை மற்றும் மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • மோசடி பேர்வழிகளில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று நிறுவனத்தின் தலைமை மேலாளர் விஜயகுமார் தயாளன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

சென்னையில் ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசிகளை போலியாக தயாரித்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் நரசத்பேட்டை மற்றும் மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது போன்ற மோசடி பேர்வழிகளில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் தலைமை மேலாளர் விஜயகுமார் தயாளன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோவை, விழுப்புரம், நாமக்கல், தூத்துக்குடி, திருச்சி மாவட்டங்களிலும் இது போன்ற மோசடிகள் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Tags:    

Similar News