உள்ளூர் செய்திகள்
எண்ணூரில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு 4 பேர் கைது
- எண்ணூர் அன்னை சத்தியவாணி முத்து நகரை சேர்ந்தவர் தினேஷ்.
- எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், மணி, மதன், கருப்பு மணி ஆகிய 4 பேரை கைது செய்தனர்
திருவொற்றியூர்:
எண்ணூர் அன்னை சத்தியவாணி முத்து நகரை சேர்ந்தவர் தினேஷ் (வயது 25) ரவுடி. இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த ராஜேசின் நண்பர்கள், தினேசை மடக்கி பிடித்து அரிவாளை பறித்தனர். மேலும் அதே அரிவாளால் தினேசை சரமாரியாக வெட்டினர்.
இதில் தினேஷ் படுகாயம் அடைந்தார். அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுதொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், மணி, மதன், கருப்பு மணி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.