உள்ளூர் செய்திகள்
வண்டலூர் அருகே தண்டவாளத்தில் தலைவைத்து முதியவர் தற்கொலை
- முதியவர் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரெயில் சென்ற போது திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார்.
- தாம்பரம் ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வண்டலூர்:
வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி விரிவு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது66). உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் குமார் மனவேதனையில் இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வண்டலூர் ரெயில் நிலையம் அருகே குமார் வந்தார். திடீரென அவர் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரெயில் சென்ற போது திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே குமார் பலியானார். தாம்பரம் ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.