காஞ்சிபுரத்தில் கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சேவை மையமாக மாற்றுவது குறித்து ஆலோசனை
காஞ்சிபுரம்:
கூட்டுறவுத் துறை காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுதல் குறித்து கலந்தாய்வு கூட்டம் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.லட்சுமி தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான முருகன் முன்னிலை வகித்தார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையமாக மாற்றுவது குறித்து நபார்டு வங்கியின் மாவட்ட விரிவாக்க அலுவலர் விஜய் நேஹா, மண்டல இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர், பணியாளர் அலுவலர் மு.தயாளன், சரக துணைப் பதிவாளர்கள் த.சுவாதி, ம.சுடர்விழி, பா.ஐஸ்வர்யா வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர், கண்காணிப்பாளர்கள், கள அலுவலர்கள், பொது மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் அலுவலர் ரவிச் சந்திரன் நன்றி கூறினார்.