உள்ளூர் செய்திகள்
சோழவரம்- பொன்னேரியில் 3 கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை
- பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கம் சக்தி நாராயண பெருமாள் கோவில் மற்றும் லட்சுமி அம்மன் கோவிலிலும் கொள்ளை நடந்து உள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சென்னிவாக்கம், கிராமத்தில் தியாஞ்சி அம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிச்சென்றனர்.
இந்த நிலையில் நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளிச்சென்று விட்டனர். இன்று அதிகாலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கம் சக்தி நாராயண பெருமாள் கோவில் மற்றும் லட்சுமி அம்மன் கோவிலிலும் கொள்ளை நடந்து உள்ளது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.