உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்த காட்சி.

திண்டுக்கல்லில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் நிர்வாகிகள் கைது

Published On 2022-11-11 10:59 IST   |   Update On 2022-11-11 10:59:00 IST
  • பட்டம் படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலையை உருவாக்கிய மத்திய அரசை கண்டித்து கருப்பு பட்டம் விடும் போராட்டம் மகிளா காங்கிரஸ் சார்பில் நடைபெற உள்ளது.
  • இல்லத்தரசிகளின் குடும்பசுமையை ஏற்றி சமையல் எரிவாயு விலை உயர்வை உயர்த்திய பிரதமர் மோடிக்கு விறகு பரிசு கொடுக்கும் போராட்டம் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டன் சார்பில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சமூகவலைதளங்கள் மூலம் ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி இதுவரை எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு செங்கல் பரிசு கொடுக்கும் நூதனபோராட்டம் நடைபெற உள்ளது.

மேலும் பட்டம் படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலையை உருவாக்கிய மத்திய அரசை கண்டித்து கருப்பு பட்டம் விடும் போராட்டம் மகிளா காங்கிரஸ் சார்பில் நடைபெற உள்ளது.

இல்லத்தரசிகளின் குடும்பசுமையை ஏற்றி சமையல் எரிவாயு விலை உயர்வை உயர்த்திய பிரதமர் மோடிக்கு விறகு பரிசு கொடுக்கும் போராட்டம் இன்று(11-ந்தேதி) காலை 9 மணிக்கு நடைபெறும். எனவே காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதனைதொடர்ந்து மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்த துரை மணிகண்டன் உள்பட கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி வந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News