உள்ளூர் செய்திகள்

நகை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த பிரபல கொள்ளையன் ரெயில் மோதி பலி

Published On 2023-01-29 13:39 IST   |   Update On 2023-01-29 13:39:00 IST
  • மனைவியுடன் நகை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த பிரபல கொள்ளையன் ரெயில் மோதி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • சிவக்குமாரின் மனைவி தற்போது திருட்டு வழக்கில் கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

கோவை:

கோவை போத்தனூர் ரெயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். அப்போது அந்த ஆணின் சட்டை பாக்கெட்டில் ஒரு செல்போன் எண் மற்றும் வாகன லைசென்ஸ் இருந்தது. அதனை கைப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் அவர் சாய்பாபா காலனியை அடுத்த இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரின் உடலை ஒப்படைக்க அவரது மனைவி குறித்து விசாரித்தனர்.

அப்போது அவர் திருட்டு வழக்கில் சிறையில் இருப்பது தெரியவந்தது. மேலும் சிவக்குமார் மீதும் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும், அதற்காக போலீசார் சிவக்குமாரை தேடி வருவதும் தெரியவந்தது.

சிவக்குமார் நகை பறித்த பின்னர் சில நாட்கள் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். அந்த சமயத்தில் தான் சிவக்குமார் போத்தனூர் ரெயில் நிலைய பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராதவிதமாக ரெயில் மோதி இறந்து உள்ளார்.

சிவக்குமார் போலீசாரிடம் இருந்து தப்ப பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளார். கோவை நகரில் இவர் 25-க்கும் மேற்பட்ட நகை பறிப்பு வழக்கில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் கணவன்-மனைவி பல்வேறு நகை பறிப்பில் ஈடுபட்டு, அதை விற்று கார் மற்றும் பல்வேறு பொருட்களை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

சிவக்குமாரின் மனைவி தற்போது திருட்டு வழக்கில் கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மனைவியுடன் நகை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த பிரபல கொள்ளையன் ரெயில் மோதி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News